தோனி கொடுத்த அட்வைஸ்… பின்பற்றுவது கடினம்.. ஆனாலும் முயற்சித்தேன்… ருத்துராஜ் கெய்கவாட்

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், கொல்கத்தா நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் குவித்து (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி குறித்து 23 வயதான ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், ‘தொடர்ந்து இரு ஆட்டங்களில் அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலை என்றாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களது கேப்டன் டோனி அடிக்கடி சொல்வார்.

இது கடினம் தான். ஆனால் அதை பின்பற்ற முயற்சிக்கிறேன். உடற்பயிற்சி கூடத்தில் கடினமாக உழைக்கிறேன். என்னிடம் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!