இந்த சீசனை ருதுராஜ் எப்போதும் நினைவில் வைத்திருப்பார் : கேப்டன் தோனி

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், கொல்கத்தா நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் குவித்து (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், பரபரப்பாக நகர்ந்த கடைசி கட்டத்தில் எங்களுக்கு சாதகமாக முடிந்த ஒரே ஆட்டம் இதுதான். வெற்றிக்குரிய எல்லா பெருமையும் வீரர்களையே சாரும்.

இந்த சீசன் முழுவதும் ஜடேஜா அருமையாக விளையாடி வருகிறார். இறுதிகட்ட ஓவர்களில் பொறுப்பை எடுத்துக் கொண்டு எங்களுக்காக சிறப்பாக ரன் குவிக்கும் ஒரே வீரர் அவர் தான். இளம் வீரர்களில் அதிகமான திறமை கொண்ட ஒரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட். அதை அவர் களத்தில் காட்டி விட்டார். இந்த ஐ.பி.எல். சீசனை அவர் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!