கடைசி பந்தில் அதிக வெற்றி : சென்னை அணிக்கு முதலிடம்

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், கொல்கத்தா நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 2 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது.

அப்போது களத்தில் இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (31 ரன், நாட்-அவுட்) கடைசி இரு பந்தையும் சிக்சருக்கு விரட்டியடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இலக்கை விரட்டும் போது (சேசிங்) கடைசி பந்தில் அதிக முறை வெற்றியை ருசித்த அணியாக (6 முறை) சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. இதில் மும்பை அணி 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!