தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி : மும்பையுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்கத்தில் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி கேப்பட்டல்ஸ் அணி கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து பிளேஅப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் திணறி வருகிறது.

அடுத்தடுத்து சதம் அடித்து சாதனை படைத்த ஷிகர் தவான் கடைசி இரு ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹெட்மயர், ஸ்டோனிஸ், ரஹானே உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து சோபிக்க வேண்டியது அவசியமாகும்.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட்டது. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அதே உத்வேகத்துடன் இந்த ஆட்டத்திலும் களமிறங்கும்.

தசைப்பிடிப்பால் அவதிப்படும் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. பொல்லார்ட் அணியை தொடர்ந்து வழிநடத்துவார். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!