அறிப்பை ஏற்படுத்தும் செயற்கை அணிகலன்கள்
செயற்கை அணிகலன்கள் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது. சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் …
Read More