உயிரிழந்த நபர்கள் குறித்து சுதத் சமரவீர சொன்ன தகவல்

இலங்கையில் கொரோனா பாதிப்பால் நேற்றுமுன்தினம் பலியான மூன்று பேரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவ கலாநிதி சுதத் சமரவீர கூறியுள்ளார் . கடந்த நாட்களில் அதிகரித்த கொரோனா மரணம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர், நெடுங்கால நோய்களால் பாதிக்கப்பட்ட , வயது கூடியவர்களுக்கு கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ளது. ஆகவே , வயது கூடியவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை எடுப்பது முக்கியம் என்று கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *