வாக்களித்த உண்மையை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

இலங்கையில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவிடம் சொல்லி விட்டே தான் வாக்களித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கூறியுள்ளார் .சிங்கள இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார் . ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமை எனது கணவரிடம் உள்ளது. ஆகையால் , என்னை அந்த கட்சியில் இருந்து நீக்க முடியாது. பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது நண்பர். எனது கணவர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் டயனா கமகே கூறியிருக்கிறார் . எவ்வாறாயினும் டயனா கமகேவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!