கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகை திடீர் மனு தாக்கல்

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார் .மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை ஏற்படுத்துவதாகவும் எனவே விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் எதிர்தரப்பு வழக்கறிஞர் தன்னை மனரீதியாக புண்படுத்துவதாகவும் அப்போது நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இதில் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!