100-விக்கெட்டாக விராட்கோலி : சாதனை படைத்த பும்ரா

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களுரு அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்ப்ரீத் பூம்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பும்ராவின் முதல் ஐ.பி.எல். விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!