முதல் அணியாக பிளேஅப் சுற்றை உறுதி செய்த மும்பை

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களுரு அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் 33(24) ரன்களும், அரைசதத்தை பதிவு செய்திருந்த தேவ்தத் படிக்கல், தனது 74(45) ஆட்டமிழந்தனர். மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில், டி காக்18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார்.

மறுமுனையில் சவுரப் திவாரி 5(8), க்ருனால் பாண்டியா 10(10), ஹர்திக் பாண்டியா 17(15) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தாலும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ரன்கள் குவித்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!