பிளேஅப் சுற்றுக்கு முன்னேறுமா கொல்கத்தா : சென்னை அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதுவரை 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வி என்று கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி ஏற்கனவே பிளேஅப் சுற்று வாய்பை இழந்துவிட்டது. இதனால் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது.

கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பழிதீர்த்து அவர்களின் அடுத்து சுற்று கனவை சிதைக்க தீவிரம் காட்டும்.

12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ள கொல்கத்தா அணி எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அதனால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான்.

இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!