அக்டோபர் 29 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்
1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார். 1665 – போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர். 1675 – லைப்னித்சு முதற்தடவையாக ∫ என்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார். 1832 – இந்தியாவில் பங்களூரில் நிலை கொண்டிருந்த பிரித்தானியப் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. 1863 – ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். 1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் …
Read More