தமிழ் சினிமாவின் வித்தகக் கவிஞர் பா.விஜய்க்கு இன்று பிறந்த தினம்

தமிழ் சினிமாவில் வானத்தைப்போல, ஆட்டோகிராப், உன்னாலே உன்னாலே, என பல சூப்பர் ஹிட் படங்களில் மனதை மயக்க வைக்கும் பாடல் வரிகளின் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர் பாடலாசிரியர் பா விஜய். இதில் திரைத்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்டு இன்று வரை பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதி வரும் பா விஜய் பல பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அக்டோபர் 20 ம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!