ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா? சென்னை அணியின் கருத்து என்ன?

துபாய்,

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 26-ந் தேதி அமீரகம் சென்னை சென்னை அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

இதனால், ஏமாற்றம் அடைந்த சென்னை அணி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில், சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,

ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா தானாகவே விலகியுள்ளார். எனவே, அவரது தனிப்பட்ட முடிவுகளுக்கு  மதிப்பளிக்க வேண்டும்.  எனவே,  அது (ரெய்னாவை மீண்டும் இடம் பெறச்செய்வது) குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *