கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : ஐதராபாத் 142 ரன்கள் குவிப்பு

அபுதாபி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அரைசதம் அடித்த மனிஷ் பாண்டே 51 ரன்களும், கேப்டன் வார்னர் 36 ரன்களும், விருத்திமான் சாஹா 30 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 143 ரன்கள் வெற்றியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *