எஸ்பிபியின் இந்த பாடல் என் பேவரெட் : சச்சின் தெண்டுல்கர் ட்விட்

கொரோனா பாதிக்ப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று காலமானார். அவரது மறைவு இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் எஸ்பிபி மறைவு குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

எனது பிளேலிஸ்ட்டில் அந்த பாடலை நான் எப்போதும் வைத்திருப்பேன். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *