வீரர்களின் ஆட்டத்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது : டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று. துபாயில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 176 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131ரன்களில் சுருண்டது. இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில்,

வீரர்களின் ஆட்டத்திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரபடாவும், ஆன்ரிச் நோட்ஜே எங்கள் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. இருவரும் எங்கள் அணிக்கு முக்கியமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *