இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை : தோனி வேதனை

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று. துபாயில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 176 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131ரன்களில் சுருண்டது. இந்த குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில்,

இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. ஆடுகளம் மெதுவாக இருந்தது. பேட்டிங்கில் உத்வேகம் இல்லாதது அணியை மிகவும் காயப்படுத்தியது. ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, சுழற்பந்து வீரர்ரையோ சேர்த்தால் அது பேட்ஸ்மேனுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அடுத்த போட்டிக்கு அம்பதி ராயுடு வந்து விடுவார். அப்போது அணி சமநிலை பெற்று விடும். அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *