அனுஷ்காவை நான் குறை கூறவில்லை : அந்தர் பல்டி அடித்த கவாஸ்கர்

புதுடெல்லி:

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வியை சந்தித்து.

இந்த போட்டியில் பீல்டிங்கின்போது 2 கேட்ச்சுகளை தவறவிட்ட பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, பேட்டிங்கில் 1 ரன்னுக்கு நடையை கட்டினார். இந்த ஆட்டத்தை வர்ணனை செய்த முன்னாள் கேப்டன் காவஸ்கர், ஊரடங்கு காலத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்து இருக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் கடுப்பான அனுஷ்கா சர்மா கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா? என்று அவர் சாடியிருந்தார். தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவாஸ்கர், அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை

ஊரடங்கு காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியதை வேடிக்கையான விளையாட்டு என்றுதான் கூறினேன். . நான் பாலியல் ரீதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. யாராவது அதை விளக்கி இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!