ராணுவ சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை

இலங்கையில் கொழும்பு – மோதர ரொக் ஹவுஸ் ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ  சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றிருப்பதாக பொலிஸார் கூறுகிறார்கள் . இந்த ராணுவச் சிப்பாய் தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் குருநாகல் – நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது ராணுவ சிப்பாயே இப்படி பலியாகியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *