ஜூனிபர் பெர்ரியின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா ?

சாதாரணமாக ஜூனிபர் பெர்ரி சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் ஜூனிபர் பெர்ரி சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பைக்கு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உறுதுணை செய்கிறது . இதில் ஜூனிபர் புதரில் நறுமண எண்ணெய்கள், கேடசின்கள், பிசின்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள், லிக்னின்கள், டெர்பெனிக் அமிலங்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் லுகோஅந்தோசயனிடின் நிறைந்துள்ளது.  அதிலும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் ஜூனிபர் பெர்ரி இதய ஆரோக்கியத்தை பேணி காக்க உதவுகிறது. இந்த ஜூனிபர் பெர்ரிகளில் ஆண்டி-நீரிழிவு பண்புகள் இருக்கின்றன . அதிலும் குறிப்பாக இதில் அதிக ஆக்ஸிஜனேற்ற செறிவு இருக்கிறது. முன்னதாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மா அண்ட் பயோ சயின்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு வழங்கப்பட்ட ஜூனிபர் பெர்ரி சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைத்து, நல்ல கொழுப்பை உயர்த்தியிருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *