ரோகித் அதிரடி ஆட்டம் : கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது பைிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மும்பை இண்டியஸ் அணி தீனேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் டிகாக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்ததை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சவுரப் திவாரி 21 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 54 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஹர்த்திக் பாண்டியா ஹிட் விக்கெட் மூலம் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. பொல்லார்ட் 7 பந்தகளில் 13 ரன்களும் குனால் பாண்டியா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணி தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *