அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்

13-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் சாம் கர்ரன் விளையாடி வருகிறார்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது அண்ணன் டாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார். இதில் சாம் கர்ரன் நேர்த்தியாக பந்து வீசி 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் டாம் கர்ரன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதில் தம்பி ரன் விட்டுக்கொடுக்காத நிலையில் அண்ணன் அதிக ரன்கள் கொடுத்தது பெரும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ரன்னை கட்டுப்படுத்தும் ரகசியத்தை அண்ணனுக்கு தம்பி வெளிப்படுத்தவில்லை என்று சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *