பி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

வரும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடக்கிறது. இதற்கான மத்திய கிழக்கு நாடுகளுக்கான மீடியா உரிமையை பெற பெல்என் ஸ்போர்ட் (belN Sport) நிறுவனம் விரும்பியது.

பிஃபாவுக்கும், பெல்என் ஸ்போர்ட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பிஃபா பொதுச் செயலாளர் வால்க்கே இத்தாலியில் உள்ள ஒரு வீட்டை வாங்க பிஎஸ்ஜி அணி தலைவர் 6.4 மில்லியன் யூரோ செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை சுவிட்சர்லாந்தில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாசர் அல்-கெலைஃபி-க்கு 28 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். உலகின் பணக்கார கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியின் தலைவராக நாசர் அல்-கெலைஃபி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *