சில போட்டிகளில் ராயுடுக்கு வாய்ப்பு இல்லை : சென்னை அணி அதிர்ச்சி

ஐக்கிய அரபு அமீரகததில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் சென்னை அணியில் அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆனால், நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் சிறிய காயத்தால் ராயுடு பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ராயுடு மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பதி ராயுடு இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *