7-வது வீரராக களமிறங்கிய தோனி : கடும் விமர்சனம் செய்த கம்பீர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது பைிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் 217 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் டோனி 7-வது வரிசையில் ஆடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தோனி 7-வது வீரராக களம் இறங்கியது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

217 ரன் இலக்கு தேவைப்படும்போது, தோனி 7-வது வரிசையில் களம் இறங்கியது தவறான முடிவு. அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. முதல் 6 ஓவருக்கு பிறகு நீங்கள் ஆட்டத்தை கைவிட்டு விட்டீர்கள். நீங்கள் முன்னதாக ஆடி இருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்க முடியும்.

சாம் கர்ரன், கெய்க்வாட், கேதர் ஜாதவ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் உங்களை விட சிறந்தவர்கள் என்று ரசிகர்களை நம்ப வைக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *