முதல் போட்டியில் மும்பை அணியுடன் மோதுவது நல்லது : கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மொதுகின்றன. முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மும்பை அணியுடன் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதிய கொலே்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் முதல் போட்டியிலேயே மும்பையுடன் மோதுவது மகிழ்ச்சி என கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

தொடரின் தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவது சிறந்த விசயம். அவர்கள் அணிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்தத் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 160 முதல் 170 வரையிலான ஸ்கோர் சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *