நடுவர் குறித்து விமர்சனத்தை திரும்ப பெற்ற தோனி மனைவி

13-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4 வது லீக் போட்டியில் சென்னை அணி 16ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது சென்னை வீரர் தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் கர்ரனின் பேட்டை பந்து உரசி சென்றதுபோல் இருந்தது.

அதை கேட்ச் பிடித்த தோனி உடனடியாக அப்பீல் செய்ததை தொடர்ந்து நடுவர் அவுட் வழங்கினார். ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு அப்பீல் செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது.

ஆனால் டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தோனி நடுவருடன் விவாதித்தார். இது குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டர் பதிவில்,  ‘‘அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள்’’ என்று டுவிட்டரில் கூறி இருந்தார்.

ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்‌ஷி டோனி நீக்கிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *