ஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று : ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் சுமித்

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணையித்த 2017 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறுகையில்,

கடைசி ஓவரில் ஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிகவும் பிரமாதமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சிக்சர்களை விளாசினார். அவரது ஆட்டமும் அற்புதமாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *