7-வது வரிசையில் களம் இறங்கியது ஏன்? தோனி விளக்கம்

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணையித்த 2017 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன்  டோனி கூறுகையில்,

217 ரன் என்ற கடினமான இலக்கு இருக்கும்போது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையாததால் இந்த கடினமான ரன் இலக்கை எட்ட முடியவில்லை. நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள தனிமைப்படுத்துதல் உதவவில்லை. இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன்.

சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம். டு பிளிஸ்சிஸ் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். எங்களது பந்து வீச்சாளர்கள் பல்வேறு பிழைகளை செய்தனர். நோபாலை கட்டுப்படுத்தவில்லை. ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம் என தெரிவிதுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *