பரமத்தி அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள பில்லூர் சீத்தக்காடு பகுதியில் ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவர் மூர்த்திபட்டியை சேர்ந்த பிச்சமுத்து மகன் கதிர்வேல் (வயது 28) என்பதும், கூலித்தொழிலாளி செய்து வந்ததும் தெரிந்தது.

இவருக்கு திருமணமாகி ரம்யா (26) என்ற மனைவியும், மகேஷ் (4), யுகேஷ் (1) ஆகிய 2 மகன்கள் இருப்பதும் தெரிந்தது. கதிர்வேலுக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் கதிர்வேல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *