மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று காலை 95.27 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 58.88 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *