சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது

Read More

அருமையான பயன்தரும் ஆவாரம் பூக்கள்

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச்  சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

Read More

குப்பைமேனி தரும் நன்மைகள்

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

Read More

சுண்டைக்காய் தரும் நன்மைகள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும். காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் …

Read More

வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும் பெருங்காயம்

வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.

Read More

செப்டம்பர் 23 :வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. 1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள்  பெற்றனர். 1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது. 1780 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 1803 – இரண்டாம் …

Read More

நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 23

1821 – திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர். 1846 – நெப்டியூன் கோள் உர்பெயின் ஜோசப், ஜோன் அடம்ஸ், யோகான் கோட்பிரீடு கல்லே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1868 – எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது. 1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது. 1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1905 – நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன. 1913 – பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.

Read More

இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்த நாள் செப்டம்பர் 23

1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது. 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது. 1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர். 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது. 1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது. 1980 – பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.

Read More

செப்டம்பர் 23 : மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட் தினம்

1983 – மட்டக்களப்பு சிறை உடைப்பு: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். 1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது. 1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர். 1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. 2002 – மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது. 2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2008 – பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

Read More

செப்டம்பர் 23 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

கிமு 63 – அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14) 1215 – குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294) 1791 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865) 1851 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930) 1869 – டைஃபாய்டு மேரி, அமெரிக்க சமையற்கலை நிபுணர் (இ. 1938) 1871 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (இ. 1957) 1882 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (இ. 1973) 1895 – ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961) 1900 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ. 1992) 1908 – ராம்தாரி …

Read More
error: Content is protected !!