இப்போதைய அரசு குறித்து ஆவேசமாக அறிக்கை வெளியிட்ட தங்கர் பச்சான்

தற்போது நீட் தேர்வு குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் , மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது? மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி என்று பல கேள்விகளை முன் வைத்து கொண்டுள்ளார் . மேலும், சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த ஆவேச நிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை! அனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இந்த விஷயத்தில் உடனடியாக தீர்வு கண்டெத்த வேண்டும் என்று தங்கர் பச்சான் தன் ஆதங்கங்களை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *