பெரும் விவகாரமாகும் போதைப் பொருள் வழக்கு ; பிரபல நட்சத்திர தம்பதிக்கு அனுப்பப்பட்ட சம்மன்

தற்போது போதைப் பொருள் விவகாரத்தில் ஷேக் பாசில் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவருக்கும் கன்னட நடிகை ஆண்ட்ரிதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக கடந்த சில தினங்களாக மீடியாவில் செய்தி பரவின. இதனிடையே கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை ஆண்ட்ரிதா ராய்க்கும் அவர் காதல் கணவரும் நடிகருமான திகாந்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். அதன்பிரகாரம் அவர்கள் நாளை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும். இந்த விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *