உங்கள் வீட்டில் சில்லி பன்னீர் தயார் செய்வது எப்படி

இன்று சில்லி பன்னீர் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம் .

இதற்கு தேவைப்படும் பொருட்கள்:
பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) , குடைமிளகாய் – 1 கப் ,வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) , பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது) ,பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன் , தக்காளி சாஸ் – 1 1/2 டேபிள் ஸ்பூன் , மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், ஸ்பிரிங் ஆனியன்/கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) , எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:
மைதா – 1 டேபிள் ஸ்பூன், சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் , மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, தண்ணீர் – போதுமான அளவு

இதனை செய்யும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதன் பிறகு அதில் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதையடுத்து அதில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பன்னீரைப் போட்டு ஒருமுறை கிளறி விட்டு இறக்கி வைக்கவும். பின்னர் அவற்றின் மேலே கொத்தமல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி பன்னீர் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *