சுவையான வேர்க்கடலை சட்னி வீட்டில் தயார் செய்வது எப்படி

இப்போது டேஸ்டுடன் கூடிய வேர்க்கடலை சட்னி வீட்டில் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இதற்கு தேவைப்படும் பொருள்கள்:

வறுத்த வேர்க்கடலை – 3/4 கப், பொட்டுக்கடலை – 1/4 கப் , மிளகாய் வத்தல் – 2, புளி – சிறிய கோலி அளவு , பூண்டுப்பல் – 1, உப்பு – போதுமான அளவு

தாளிக்க தேவைப்படும் பொருள்கள்:

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி , கடுகு – 1 தேக்கரண்டி , கறிவேப்பிலை – சிறிது

இதனை செய்யும் முறை :

முதலில் மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்பு
ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பூண்டுப்பற்கள், உப்பு போன்றவற்றையும் ஒன்றாக சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். இதில் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி கொள்ளவும் . இப்போது இட்லி, தோசைக்கு உகந்த சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *