இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://youtu.be/2hhLTGQlg8Eநடிகர் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார். கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Read More

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் வெளியிடுள்ள பதிவில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்… இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read More

ஓடிடி தளத்தில் வெளியாகும் விஷால் திரைப்படம்

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். இந்நிலையில், சக்ரா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

வேளாங்கண்ணி அருகே கார் மோதிய விபத்தில் மாணவன் பலி

வேளாங்கண்ணி: திருவாரூர் மகாராஜா தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ் (வயது 13). இவன் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். வேளாங்கண்ணி அருகே தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக சந்தோஷ் மீது மோதியது. இந்த விபத்தில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவனை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை …

Read More

கூத்தாநல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சையதுசுல்தான்பீவி (வயது 34). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகரறு காரணமாக கணவரை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக பொதக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டில் சையதுசுல்தான்பீவி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சையதுசுல்தான்பீவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பொதக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் …

Read More

நாகூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நாகூர்: நாகூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகூர் போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த இப்ராகிம்(வயது54) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Read More

கலவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

கலவை: கலவை பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 52). இவர் தனது மகள் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் சென்றார். வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து சென்றார். நேற்று கந்தனின் வீட்டு கதவு திறந்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரா உடனடியாக கந்தனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த கந்தன் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 2¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Read More

குடியாத்தத்தில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

குடியாத்தம்: குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று வள்ளலார் தெரு பகுதியில் திடீரென சோதனை செய்தனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அதேபோல் பிச்சனூர் பாலகங்காதர திலகர் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த ராமமூர்த்தி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Read More

தியாகதுருகம் அருகே வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி

கண்டாச்சிமங்கலம்: தியாகதுருகம் பஸ் நிறுத்தம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிருக்கு போராடியபடி மயங்கி கிடந்தார். அவரை அக்கம் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Read More

குறிச்சி பகுதியில் நாளை மின் தடை

கோவை: குனியமுத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.நந்தகுமார் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில்:- கோவை குறிச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Read More