மேற்கு வங்கத்தில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மேலும் 3,227-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் 59 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 146- ஆக உள்ளது.  கொரோனா பாதிபக்கப்பட்டுன  23 ஆயிரத்து 942 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 ஆயிரத்து 62 பேர் தொற்று பாதிப்பால்  உயிர் இழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *