கர்நாடகாவில் இன்று மேலும் 7,576 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று மேலும் 7,576 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,75,265 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,481 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 7,406 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *