2023 உலககோப்பை தொடரில் விளையாட தயாராகிறேன் : ஸ்ரீசந்த் அதிரடி அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க தயாராகி வரும் அவர், கடந்த சில தினங்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,

நான் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் ஆனால் இப்போது நான் ஒரு புதுமுக வீரர் போல உணர்கிறேன். 7 வருடங்களுக்கு பிறகு விளையாட வருகின்ற போதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மீண்டும் விளையாட அனுமதிக்க கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *