சென்னையில் 1.5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,708 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78,711 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும், இதுவரை 58,58,300 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *