மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா

இந்தூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், இன்று மேலும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,053 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கொரோனா பாதிப்பால் 29 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,820 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 69,613 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 21,620 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *