அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு

இடாநகர்,

இந்தியாவில் கொரேனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வகையில், தற்போது அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *