மராட்டியத்தில் 11 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

மும்பை,

இந்தியாவில் கொரேனா பாதிப்பு அதிகம் உள்ள, மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,97,856 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 515 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,409 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,75,273 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 2,91,797 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *