புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறப்பு குறித்து மத்திய அரசை தாக்கிய ராகுல்காந்தி

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டபதால் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலை இழந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனால் தொழிலாளர்கள் பலர் வெகுதூரம் நடந்தே தங்களது ஊருக்கு சென்றனர். இதில் பல தொழிலாளர்கள் லாரி மற்றும் இதர வாகனங்களில் குடும்பத்துடன் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து மோடி தலைமையிலான அரசுக்கு தெரியவில்லை. எத்தனை பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

நீங்கள் கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா? மக்கள் உயிரிழப்பதை நினைத்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது வருத்தமான ஒன்று. புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பதை உலகம் பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு இதுபற்றி தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *