இந்துக்களுக்கு ஆதரவான கருத்து : தொடர்ந்து மிரட்டலை சந்தித்து வரும் முகமது ஷமி மனைவி

கொல்கத்தா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, ஹாசின் ஜஹான், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர், சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார்.

ஆனால் இதற்கு போலீசார் தரப்பில் எவ்வத நடவடிக்கையும் எடுக்காததால்,, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள அவர், தன் மனுவில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன்.எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *