பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி : ரபேல் நடால் எதிர்ப்பு

பாரிஸ்:

கொரோனா வைரஸ் அச்சுறுது்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது.

இந்நிலையில், வருகிற 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரபேல் நடால், கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *