காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பெருமளவில் சிக்கிய போதை பொருட்கள்

இலங்கையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.புதுக்குடியிருப்பு உயிலங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அந்த நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனோடு அவர்களிமிருந்து மேலதிகமாக 100 அமெரிக்க டாலர் நாணயதாள்களுடன் 5, 1,725,000 ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஒன்றும் கைப்பற்றபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *