மதிய நேர விருந்துக்கு ஏற்ற கேரட் கூட்டு செய்வது எப்படி

மதிய நேர சாப்பாட்டுக்கு கூட்டாக எடுத்து கொள்ளத்தக்க கேரட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு தேவைப்படும் பொருள்கள் :

கேரட் – 2, துவரம் பருப்பு – 50 கிராம் , சாம்பார் பொடி – 2 மேஜைக்கரண்டி, காயத் தூள் – 1/4 தேக்கரண்டி , மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி , உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவைப்படும் பொருள்கள் :

தேங்காய் துருவல் – 1/4 கப் , தக்காளி – 1 , சின்ன வெங்காயம் – 5

தாளிக்க தேவைப்படும் பொருள்கள் :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி , கடுகு – 1/2 தேக்கரண்டி , உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி ,
வெங்காயம் – 1/4 பங்கு , கறிவேப்பிலை – சிறிது

இதனை செய்யும் முறை:

முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின்பு துவரம் பருப்புடன் காயம் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு அடுப்பில் கடாயை வைத்து கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். இதில் கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு,மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இதில் மசாலா வாடை நீங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். இப்போது கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அதனையடுத்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து கொள்ளவும். இதில் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதில் வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். இப்போது சுவையான கேரட் கூட்டு தயாராகி விட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *